Saturday, 6 December 2014



மத்திய அரசின் பரிசீலனை சரியா?

மானியத்தால் நிதி இழப்பு, கள்ளச் சந்தை விற்பனையைத் தடுக்க, மின் இணைப்பு உள்ள குடும்பங்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்குவதை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிப்பது...
வரவேற்கத்தக்கது
:
44%
தவறான முடிவு
:
52%
நோட்டா
:
4%
மொத்த வாக்குகள்: 2001
நன்றி: தி இந்து 6/12/2014 காலை 7.40 மணியளவில்

Keep kerosene subsidy: CPI

Terming the move to scrap the kerosene subsidy “a shameless attack on the poor and downtrodden,” the CPI demanded that the subsidy on the fuel remain.
On Friday, The Hindu reported that the Finance Ministry was planning to take forward the previous government’s policy of phasing out subsidised kerosene.
“Gas supply is very inadequate and sold in black markets. Some States becoming 100 per cent electrified and kerosene-free is a big lie,”CPI general secretary S. Sudhakar Reddy said. “While the Centre is giving more than five lakh crore subsidies or tax concessions to corporates every year, the kerosene subsidy of Rs 852 crore to poor people is not even 1.5 per cent of it.”
The Hindu:

Saturday, 22 November 2014



கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேட்டி

நன்றி: தி இந்து சனி, நவம்பர் 22, 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் தி இந்துவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடக்கவிருக்கும் இந்த அகில இந்திய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. இந்தியாவில் பண்பு ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை பிரதமர், குடியரசு தலைவரை தவிர வேறு யாரும் அரசு ஊடகத்தில் தேசத்துக்காக உரையாற்றியதில்லை.
ஆனால், முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தசரா பண்டிகையின் போது உரையாற்றினார். அரசு இயந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. அரசியல், கலாச்சாரம், வரலாறு என எல்லா தளங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஊடுருவல் உள்ளது. இது மதச்சார்பற்ற ஜன நாயக குடியரசுக்கு ஆபத்தாகும்.
இந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்படும். வலது சாரிகளை எதிர்த்தப் போராட்டத்தில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது, மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள முடியாது. பொருளாதாரக் கொள்கைகளிலும் ஒத்தக் கருத்துக் கொண்ட கட்சிகளோடு மட்டுமே எதிர் காலத்தில் இணைந்து பணியாற்ற முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பினால், அவர்கள் தோற்றுவிட்டார்கள். ஆனால், இடதுசாரிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது மிக முக்கிய பிரச்சினையாகும். இடதுசாரிகள் தங்களை மீண்டும் உயிர்ப்பித்து, மறு சீரமைத்துக் கொள்ள வேண்டும். அரசு கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, வருங்காலங்களில், இந்திய அரசியலில் இடதுசாரிகளுக் கான தனி அடையாளத்தை ஏற்படுத் துவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்கெனவே கூறியிருக்கிறோம்.
இரு கட்சிகளுக்கும் பெரும் பாலான விஷயங்களில் ஒத்த கருத்து உள்ள போது, ஏன் இரு கட்சி களும் இணையக் கூடாது என்ற கேள்வியை வரலாறு எங்கள் முன் வைக்கும். அப்போது அதற்கு பதில் கிடைக்கும்.

Friday, 14 November 2014





உலக சர்க்கரை நோய் தினம் - நவம்பர் 14.

செய்தி:தோழர். S.ஆறுமுகம், சேலம். (இருப்பு திருச்சி)
 
சர்க்கரை நோயை வரவேற்போம்! ஆளுமை செய்வோம்!

நவீன உலகில் மாறி வரும் வேலை முறை அதன் தொடர்ச்சியாய் கலாச்சார மாற்றங்கள் உணவு பழக்கவழக்கங்கள் யாவும் மனிதனை 40 ஐ தாண்டி நகர முடியாமல் தடை போடுகின்றன. நகரம், கிராமம் வேறுபாடின்றி நகரும் நோய்களின்
வேகத்தை குதிரை திறன் கொண்டும் குறிப்பிடமுடியாது. மனிதன் வாழ்வதும் வீழ்வதும் சர்க்கரையால் என்றால் மிகையாகாது.
வீடு வரை உறவு காடு வரை பிள்ளை கடைசி வரை சர்க்கரை.
உயில் எழுத முடியாத உலகத்து மானிடரும் நெடு துயில் செல்லுகையில் நீங்கா ஒன்றை வாரிசுக்கு வழங்கிடுவர் அதுவே சர்க்கரை நோய். நோய் நாடி நோய் முதல் நாடி என வள்ளுவனே வகைப்படுத்த முடியாத வலுவான நோய் சர்க்கரை நோய்.
நோயாளி ஒருவனை 100 ஆண்டுகள் வாழ வைக்கும் நூதன நோய் சர்க்கரையை வரவேற்போம். உடற்கூறு விஞ்ஞானம் உணர வைக்கும் புதிய நோய். கலோரி வெப்பத்தை கணக்கிடத் தூண்டும் நோய். காளையரும்,கன்னியரும் ஓய்வு பெற்ற ஊழியரும் (அதி)காலை வருமுன் கால் கடுக்க நடக்க வைக்கும், உடல் வளத்தை ஒழுங்குபடுத்தும் உன்னத நோய். இதயம், சிறு நீரகம் இயங்குகின்ற தன்மையெல்லாம் கட்டாயச்சோதனைக்கு உட்படுத்தி நல்வழி படுத்திடும் புதிய நோய். உடல் நலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆயுளை நீட்டிவிக்கும் அருமையான நோயான சர்க்கரை நோயை வரவேற்போம். ஆளுமை செய்வோம்.


NOVEMBER 14
ஜவஹர்லால் நேரு (1889-1964)

The spectacle of what is called religion, or at any rate organised religion, in India and elsewhere, has filled me with horror and I have frequently condemned it and wished to make a clean sweep of it.

என்று மதத்தின் மீதான தனது பார்வையை பதித்து

இந்தியாவை மதசார்பற்ற, ஜனநாயக, சோஷலிச நாடாக வழி நடத்தியவர்.

பொதுத்துறை நிறுவனங்களை அமைத்து வலுவான இந்தியாவை அமைத்தவர். தற்போதைய முதலாளித்துவ பொருளாதார பின்னடைவுகளிலும் இந்தியா சரியாமல் நிலைத்திறுப்பதற்கு இந்த பொதுத்துறை நிறுவனங்களே காரணமென்பதை யாராலும் மறுக்கமுடியாது.

அணி சேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கி வளர்த்து
வலுவாக்கிய பெருந்தகை.

அவரது நினைவை போற்றுவோம். இந்தியாவை காப்போம்.

Tuesday, 11 November 2014



செல்ஃபி பழக்கம் வேலைக்கு வேட்டு வைக்கும்: ஓர் ஆய்வு

நன்றி: தி இந்து 10/11/14

சமூக வலைதளங்களில் தொடர்ந்து செல்ஃபி படங்களை அப்டேட் செய்து வருபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஆய்வு.
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். அதன்படி, செல்ஃபி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதன்படி, ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.
இதனை அடுத்து எதற்காக செல்ஃபி பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.
தொழில்முனைவோரான க்ராவ்ஃபோர்ட் என்பவர் இது குறித்து கூறும்போது, "உங்களுக்கு வேலை வழங்குபவர் பல கோணங்களில் உங்களை ஆய்வு செய்வார். செல்ஃபிக்களை அதிகம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத - வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார்.
செல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்" என்றார்.
மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து அப்டேட் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

Sunday, 26 October 2014


என்னை இடதுசாரி சிந்தனைக்கு ஆட்படுத்திய, நத்தையாயிரு ந்த என்னை மீண்டும் உயிர்ப்பித்த, தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நிலை நிறுத்தி என்றும் எனக்கும் எங்கள் தோழர்களுக்கெல்லாம் வழிகாட்டும்

எளிமையின் சின்னம், ஒழுக்க சீலன், பண்பாளன்,
கொண்ட கொள்கையில் சலிப்படையான் சோர்வடையான்,

எங்கள் அருமை தோழர் சேது மறியலில்