Friday, 14 November 2014





உலக சர்க்கரை நோய் தினம் - நவம்பர் 14.

செய்தி:தோழர். S.ஆறுமுகம், சேலம். (இருப்பு திருச்சி)
 
சர்க்கரை நோயை வரவேற்போம்! ஆளுமை செய்வோம்!

நவீன உலகில் மாறி வரும் வேலை முறை அதன் தொடர்ச்சியாய் கலாச்சார மாற்றங்கள் உணவு பழக்கவழக்கங்கள் யாவும் மனிதனை 40 ஐ தாண்டி நகர முடியாமல் தடை போடுகின்றன. நகரம், கிராமம் வேறுபாடின்றி நகரும் நோய்களின்
வேகத்தை குதிரை திறன் கொண்டும் குறிப்பிடமுடியாது. மனிதன் வாழ்வதும் வீழ்வதும் சர்க்கரையால் என்றால் மிகையாகாது.
வீடு வரை உறவு காடு வரை பிள்ளை கடைசி வரை சர்க்கரை.
உயில் எழுத முடியாத உலகத்து மானிடரும் நெடு துயில் செல்லுகையில் நீங்கா ஒன்றை வாரிசுக்கு வழங்கிடுவர் அதுவே சர்க்கரை நோய். நோய் நாடி நோய் முதல் நாடி என வள்ளுவனே வகைப்படுத்த முடியாத வலுவான நோய் சர்க்கரை நோய்.
நோயாளி ஒருவனை 100 ஆண்டுகள் வாழ வைக்கும் நூதன நோய் சர்க்கரையை வரவேற்போம். உடற்கூறு விஞ்ஞானம் உணர வைக்கும் புதிய நோய். கலோரி வெப்பத்தை கணக்கிடத் தூண்டும் நோய். காளையரும்,கன்னியரும் ஓய்வு பெற்ற ஊழியரும் (அதி)காலை வருமுன் கால் கடுக்க நடக்க வைக்கும், உடல் வளத்தை ஒழுங்குபடுத்தும் உன்னத நோய். இதயம், சிறு நீரகம் இயங்குகின்ற தன்மையெல்லாம் கட்டாயச்சோதனைக்கு உட்படுத்தி நல்வழி படுத்திடும் புதிய நோய். உடல் நலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆயுளை நீட்டிவிக்கும் அருமையான நோயான சர்க்கரை நோயை வரவேற்போம். ஆளுமை செய்வோம்.

No comments :

Post a Comment